ஈரோடு, தமிழகத்தில் 17 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார். முதல்-அமைச்சருடன் நடைபெற்ற காணொலி காட்சி வாயிலான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்தக் கூட்டம் பழைய கட்டடத்தின் முதல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் உள்ள லிப்ட் மூலம் அமைச்சர் அருண்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் ஆகியோர் இரண்டாவது தளத்திற்கு செல்ல முயன்றனர். லிப்டில் சிக்கிய அமைச்சர் அப்போது, எதிர்பாராதவிதமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லிப்ட் இரண்டாவது தளத்தில் நிற்காமல் சிறிதுநேரம் பாதியிலேயே நின்று, பின்னர் நேராக ஏழாவது தளத்திற்கு சென்று அங்கேயும் கதவுகள் திறக்கப்படாமல், மீண்டும் கீழே இறங்கி, ஆறாவது தளத்தில் கதவுகள் திறந்தன. இதனால் சிறிது நேரம் லிப்ட்டிற்குள்ளேயே அமைச்சரும் அதிகாரிகளும் சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனைத்தொடர்ந்து, உடனடியாக ஆறாவது தளத்தில் இருந்து பத்திரமாக வெளியேறிய அமைச்சர், பழைய கட்டடத்தில் உள்ள லிப்ட் வழியாக சென்று, முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கேற்ற காணொலி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு டெங்கு பதிப்பு குறைவாக தான் உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்பது சிறந்தது என்பதால் கொசுக்கடியில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். தவெக வேட்பாளர்களுக்கு எதிராக தூண்டுதல் "சில கட்சிகளின் தூண்டுதலின் பேரில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு, சிறப்பாக இருப்பதாக மக்கள் சொல்வதால், இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறும். திட்டமிட்டு சில கட்சிகள் தவெக வேட்பாளர் செல்லும் இடங்களில் கோஷமிடுகின்றனர். ஆனால் அந்த பகுதி மக்கள் முதல்வருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/17000-people-in-tamil-nadu-affected-by-dengue-minister-arunraj-interviewed




