ஜெம் வீரமணி விவகாரத்தில் அரசியல்வாதிகள், அதிகாரத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமீர்- வெற்றிமாறன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அப்பாவி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக வீரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீரமணிக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2003-ம் ஆண்டில் இருந்து சுமார் 23 ஆண்டுகள் வீரமணியின் பாலியல் விளையாட்டுகள் தொடர்ந்து நடந்துள்ளது. வீரமணி தொடர்பான ஆபாச வீடி யோக்கள் அவரது உதவியாளராக இருந்த கணேசன் என்பவரின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் திமுகவுக்கு தலைவலியை கொடுத்துள்ளது. ஆளும் தவெகவின் அமைச்சர்கள் தினம் தினம் திமுக ஒரு வருடமாக வீரமணியை காப்பாற்ற பணம் வாங்கி கொண்டு முயற்சி செய்ததாக கூறி வருகின்றனர். இதனால் திமுக தலைவர் ஸ்டாலின், "வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும், காப்பாற்ற முயன்றவர்கள் யாராக இருந்தாலும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்களானாலும் தப்பிக்க கூடாது" என அறிக்கை வெளியிட்டு விட்டார். அமீர்- வெற்றிமாறன் அறிக்கை ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் கொடுஞ்செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த உலகைப்பற்றியே முழுதும் அறியாத பிஞ்சுச் சிறுமிகளை குறிவைத்து அரங்கேற்றப்பட்டுள்ள இந்தத் தீய செயல்கள் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்.வீரமணியை பாதுகாக்க முயன்ற அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், அல்லது அதிகாரமிக்க நபர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சட்டத்தின் முன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், பாலியல் துன்புறுத்தலால் அதிர்ச்சிக்குள்ளான அந்த சிறுமிகளுக்குத் தேவையான சட்ட, உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு அளிக்கப்படுவதோடு, அவர்களின் அடையாளமும் கண்ணியமும் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். இனி வருங்காலங்களில் பெண்கள் சிறுமிகள் சிறுவர்கள் மீது பாலியல் தொல்லை கொடுக்கும் குற்றவாளிக்கு எந்தவித தளர்வுகளும் இன்றி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுவதே இது போன்ற குற்றச்செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க வழி வகை செய்யும். வீரமணியின் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும். மேலும் மனித நேயத்தை கேள்விக்குறியாக்கும் பாலியல் குற்றங்களை செய்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு எதிராகவே எங்களுடைய குரல் எப்போதும் ஒலிக்கும்.” என தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ameer-vetrimaran-statement-on-the-gem-veeramani-affair




