குன்னூர், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது. இதனால் நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைவு நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி பகுதிகளில் கடந்த மாதம் நடைபெற்ற கோடை விழாவில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறையினர் அரங்குகள் அமைத்து அப்பகுதியில் விளையும் பழங்களைக் கொண்டு விலங்குகளின் உருவங்கள் உருவாக்கப்பட்டு இருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் சென்றனர். மேலும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிக ளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் தற்போது தொடர் சாரல் மழை பெய்து வருவதாலும் சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. பூங்கா வெறிச்சோடியது இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் பூங்கா வெறிச்சோடி காட்சியளித்தது. மேலும் தற்போது பூங்காவில் விதைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் படகு இல்லம், கண்ணாடி மாளிகை, சிறுவர் பூங்கா, புல்வெளி மைதானம் போன்ற பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வேர்க்கடலை, சுண்டல், மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சிறுவியாபாரிகள் வியாபாரம் நடக்காததால் வேதனை அடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/coonoor-sims-park-deserted-due-to-low-tourist-arrivals




