ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்துக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித் உள்பட பலர் கைது செய் யப்பட்டனர்.பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ், தங்க கடத்தல் வழக்கில் கேரளம் முன் னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அதிர வைத்தார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட அரசியல் தலைவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது கேரளம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஸ்வப்னா சுரேசுக்கு எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே நெட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் திருமணம் நடைபெற்று உள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் உறு திப்படுத்தி உள்ளார். இது அவருக்கு 3-வது திருமணம் ஆகும். ஆனால் மணமகன் யார்? என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. எனினும் தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பி.எஸ்.சரித்தை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்தில் நெருங்கிய உற வினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. ஸ்வப்னா சுரேஷ், கடந்த 2000-ம் ஆண்டு கிருஷ்ணகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2008-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். தொடர்ந்து 2011-ம் ஆண்டு ஜெய்சங்கர் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவரையும் விவாகரத்து செய்தார். தற்போது 3-வதாக திருமணம் செய்து கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/swapna-suresh-implicated-in-the-gold-smuggling-case-has-a-secret-wedding-in-kochi




