சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை மந்திரியின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரசுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர். இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று மத்திய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன். கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த ஷோபா மாடல் முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-has-pawned-the-rights-of-tamil-nadu-udhayanidhi-stalin-has-slammed




