தர்மபுரியில் நடந்த திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-நான் ஒருபோதும் கட்சியிலிருந்து யாரையும் வெளியேற்ற வேண்டும் என்று எண்ணியதில்லை. சிலர் வி.சி.க.வை எப்படியாவது சிதறடிக்க வேண்டும். பலவீனப்படுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந் தார்கள். அவர்கள் இப்போது ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். ஒருவர் நம் கட்சிக்கு வருகிறார் என்று சொன்னால், அவரிடம் என்ன சொல் லியிருக்க வேண்டும். எங்களுடன் திருமாவளவன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றியுள்ளார். நாளை வி.சி.க. எங்களுக்கு தேவை. நீங்கள் எங்கள் கட்சிக்கு வர வேண்டாம். வேறு கட்சிக்கு செல்லுங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். அதுதான் அரசியல் அறம். எங்களாலும் வி.சி.க.வை பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில் கட்சி யில் இணைத்துக் கொண்டார்கள். நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இயக்கம் எடுத்த முடிவு என் இதயத்தில் முள் குத்தியதை போல் வலியை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தில் நூற்றுக்கணக்கான கருத்தியல் சார்ந்த படை தளபதிகள் வலிமையுடனும் பற்றுதலுடனும் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-sought-to-weaken-the-vck-have-been-left-disappointed-thirumavalavan-lashes-out




