சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மதுரை கொட்டாம்பட்டி அருகே, சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 40 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்திப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. இரங்கல் இவ்விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மேலும், பொதுச் சொத்துக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தரமான பேருந்துகளையும், அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களையும் நியமித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டுமென தமிழக அரசையும், தனியார் போக்குவரத்து நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/5-killed-in-road-accident-near-madurai-nainar-nagendran-condoles




