மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேன் 39 வயதான ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் டில் ஓய்வு பெற்று விட்டார். ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். 2027-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி முதல் நவம்பர் 21-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்கா, ஜிம் பாப்வே, நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 14-வது ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் களம் இறங்குவதே அவரது ஒரே லட்சியமாகும். ஆனாலும் அவ ருக்கு உலகக் கோப்பையில் இடம் கிடைப்பது சந்தேகமே என அவ்வப்போது யூகங்கள் கிளம்புவதும், அதற்கு கிரிக்கெட் வாரியம் மறுப்பதும் தொடர் கதையாகிறது. இந்த நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோகித் சர்மாவிடம், '2027-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அவரது பங்கேற்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ரோகித், '2027-ம் ஆண்டு அக்டோபர் என்பது இன்னும் நீண்ட தொலைவில் உள்ளது. அது குறித்து அப்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று பதில் அளித்தார். 2024-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்ற போது, வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதி யாக மும்பையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வ லமாக அழைத்து செல்லப்பட்டனர். ஒருவேளை 2027-ம் ஆண்டில் பட்டம் வென்றால் இதே போல் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக சென்று ரசிகர்களுடன் கொண்டாடப்படுமா? என கேட்ட போது. 'தற்போது அத்தகைய பஸ் ஊர்வலம் சாத்தியமில்லை' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/rohit-sharma-at-the-2027-world-cup-his-own-response




