சண்டிகர், இந்தியாவின் 80வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி அமிர்தசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்வு விழா நடைபெற்றது. அடாரி எல்லைப்பகுதி பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தின் அம்ரித்சர் மாவட்டம் அடாரி எல்லைப்பகுதி பாகிஸ்தானின் வாகா எல்லை அருகே அமைந்துள்ளது. இருநாட்டு படையினரும் இந்த எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எல்லைப்பகுதியில் தினமும் காலை இருநாட்டு பாதுகாப்புப்படையினரும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக்கொடியை மாலை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமாகும். குறிப்பாக, இந்திய சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அடாரி வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்வை கண்டுகளிப்பர். கலை நிகழ்ச்சிகள் இந்நிலையில், 80வது இந்திய சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அடாரி - வாகா எல்லையில் கலை நிகழ்ச்சிகளுடன் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தேசிய கொடி எல்லை பாதுகாப்புப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்புடன் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வாகா எல்லையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய தேசியக்கொடியை அசைத்தும், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டும் உற்சாக குரல் எழுப்பினர். | Punjab: Tiranga lowered, folded and carried back during Beating Retreat ceremony at the Attari-Wagah border. — ANI (@ANI) August 15, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/80th-independence-day-celebration-flag-lowering-ceremony-at-wagah-border-held-with-great-fanfare




