திருப்பூர், மடத்துக்குளம் அருகே அக்காள் மற்றும் தங்கைக்கு தனித்தனியாக பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவரின் மிரட்டலால், 10-ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி அரளி விதை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூலித்தொழிலாளி தம்பதி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிக்கு 17 வயது மற்றும் 14 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் 17 வயது சிறுமி ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், 14 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சிறுமிக்களின் பெற்றோர் இருவரும் தினசரி காலையில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில்தான் வீடு திரும்புவது வழக்கம். பாலியல் தொல்லை பெற்றோரின் இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நீலாம்பூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மாசாணி (வயது 52) என்பவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அக்காள், தங்கை ஆகிய இருவருக்கும் தனித்தனியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும், இதுகுறித்து வெளியில் கூறக்கூடாது என 14 வயது சிறுமியை அவர் தொடர்ந்து மிரட்டியும் வந்துள்ளார். அரளி விதை லாரி டிரைவரின் தொடர் பாலியல் தொல்லையாலும், மிரட்டலாலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான 10-ம் வகுப்பு மாணவி மிகுந்த விரக்தி அடைந்தார். இதனால் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் இருந்த அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அவரை அக்கம் பக்கத்தினர், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமி வாக்குமூலம் அப்போது, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து டாக்டர்கள் மற்றும் தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறினார். மாசாணி தனக்கும், தனது அக்காவுக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதால் தான் விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக சிறுமி வாக்குமூலம் அளித்தார். போலீசார் விசாரணை இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், மருத்துவமனை நிர்வாகமும் இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையிலும், லாரி டிரைவர் மாசாணி, அக்காள்-தங்கை இருவருக்கும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. போக்சோ சட்டத்தில் கைது இதையடுத்து, உடுமலை அனைத்து மகளிர் போலீசார் லாரி டிரைவர் மாசாணி மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், தலைமறைவாக இருந்த மாசாணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-sisters-driver-arrested-under-pocso




