சென்னை, மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- ஆடிப்பெருக்கு நமது தமிழர் பண்பாட்டின் சிறப்புமிக்க திருநாள்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு திருநாள் இன்று. தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில், இயற்கைக்கும், நீர்வளத்திற்கும், வளமான வாழ்விற்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, ஆற்றங்கரைகளிலும் கோவில்களிலும் குடும்பத்தினருடன் ஒன்றுகூடி, தலைமுறை தலைமுறையாக பேதமின்றி கொண்டாடப்பட்டு வரும் இந்தத் திருநாள், நமது கலாசாரத்தின் ஒற்றுமையையும் பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கிறது. நல்வாழ்த்துகள் இந்த இனிய ஆடிப்பெருக்கு திருநாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளம் மற்றும் நல்வாழ்வு பெருகிட எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/warm-aadi-perukku-wishes-to-everyone-l-murugan




