திருவாரூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தென்கோவன். இவரது மகன் தர்ஷன் (17 வயது). இவர் பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற தர்ஷன் தனது தந்தையிடம் செல்போன் கேட்டுள்ளார். ஆனால் விளையாடுவதற்கு செல்போன் தர முடியாது தென்கோவன் கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த தர்ஷன் அன்று இரவு வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பரவாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தர்ஷனின் தாயார் மாதவி புகார் அளித்தார். அதன் பேரில் பரவாக்கோட்டை போலீசார் அங்கு சென்று உயிரிழந்த தர்ஷனின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் தராததால் விரக்தியில் 12-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/frustrated-by-not-being-given-a-cell-phone-a-strange-decision-made-by-a-12th-grade-student




