நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் சமீபத்தில் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸுடன் 'லவ்' வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். Gatta Kusthi 2 - Aishwarya Lekshmi இதுமட்டுமல்லாமல், தமிழில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு ஃபீமேல் சென்ட்ரிக் படம், 'தீவினை போற்று' வெப் சீரிஸ் என அடுத்தடுத்த லைன்-அப்களை வைத்திருக்கிறார். கடந்தாண்டு அவர் சமூக வலைத்தளப் பக்கங்களிலிருந்து முழுமையாக விலகினார். அது குறித்து 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வுக்கு அளித்திருக்கும் பேட்டியில் அவர் பகிர்ந்திருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், "சமூக வலைத்தளப் பக்கங்களில் நான் பாதுகாப்பாக உணர்ந்ததே இல்லை. பலர் என்னுடைய உடலைப் பற்றித் தேவையில்லாமல் விமர்சித்தார்கள். என் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவிட்டார்கள். அங்கு வரும் ஒரே ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட உலகத்தில் இருக்கிற எல்லாரும் நம்மை வெறுப்பது போன்ற ஒரு உணர்வைக் கொடுத்துவிடும். சோஷியல் மீடியா என்னை ரொம்பவே எச்சரிக்கை உணர்வு கொண்டவளாக மாற்றிவிட்டது. ஐஸ்வர்யா லட்சுமி நேரில் மனிதர்கள் வந்து என்னிடம் பேச முற்படும்போது கூட, அந்த உரையாடலைச் சீக்கிரமாக முடித்துவிட்டு ஓடிவிட வேண்டும் என்றுதான் தோன்றும். உண்மையைச் சொன்னால், எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தால் கூட நான் சோஷியல் மீடியா பக்கம் இனி வரமாட்டேன். இருப்பினும் சினிமா செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், என் படங்கள் எப்படிப் போகின்றன என்று பார்க்கவும் என்னுடைய செல்லப் பிராணியின் இன்ஸ்டாகிராம் கணக்கைத்தான் இன்னமும் பயன்படுத்தி வருகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார். Gatta Kusthi 2: "எம்.பி.பி.எஸ்-ல் தேர்ச்சி பெறுவதற்காக இரவு பகலாக உழைத்தேன்!" - ஐஸ்வர்யா லக்ஷ்மி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/aishwarya-lekshmi-social-media-exit-interview-gatta-kusthi-2




