'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ் 'மார்க்கெட் ராஜா', 'ராஜ பீமா' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். 'விடாமுயற்சி', 'கலகத் தலைவன்' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தும் மிரட்டினார். சமீபத்தில் திரைக்கு வந்த 'அருள்வான்' படத்திலும் ஆரவ் நடிப்பு கவனம் ஈர்த்தது. ஆரவ் தற்போது தமிழில் 2 புதிய படங்களிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "வாய்ப்புகள் வந்தாலும் நல்ல கதைக்காக நான் காத்திருப்பதே படங்கள் இடைவெளிக்கு காரணம். சினிமா என்பது நீண்ட பயணம். இங்கு கடமைக்கு என படம் நடிக்க விரும்பவில்லை. நல்ல படமாக நடித்து ரசிகர்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்பதே என் எண்ணம். என்னைப் போல நிறைய பேர் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். இங்கு என்னை போன்றவர்களுக்கு கிடைக்கும் வெற்றி தான், அவர்களுக்கு ஊக்க மாக அமையும். எனவே இந்தப் பயணத்தில் விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டிருக்கிறேன். இடையில் சில படங்களில் வில்லனாக நடித்தேன். இனி ஹீரோவாகவே பயணிக்க விரும்புகிறேன். அதேவேளை நல்ல கதைகளை தயாரிப்பாளர்களுக்கு பரிந்துரை செய்யும் குழுவையும் அமைத்து செயல்படுகிறேன்" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dont-want-to-act-just-out-of-duty-actor-aarav




