தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரது தாயாரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வாலிபரை காதலிக்க மறுத்த இளம்பெண் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கி ராஜேஷ் (வயது 25). கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம்பெண் அந்த வாலிபரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். வீடு புகுந்து தாய், மகளை தாக்கி, கொலை மிரட்டல் இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணைத் தாக்கி, "என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய்?" எனக் கூறி கீழே தள்ளியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற அந்த இளம்பெண்ணின் தாயாரையும் அந்த வாலிபர் தாக்கியுள்ளார். மேலும், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் தாய், மகள் 2 பேரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். வாலிபர் கைது இதுகுறித்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோயில்பிள்ளை வழக்குப்பதிவு செய்து தாய், மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-over-rejection-of-love-youth-arrested-for-breaking-into-home-and-attacking-mother-and-daughter




