ஒடிசா, ஒடிசாவின் பூரியில் உலக புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள ரகசிய அறையாக கருதப்படும் ரத்ன பண்டாரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்கம், வைர நகைகள் கணக்கெடுக்கும் பணிகள் சுமார் 48 ஆண்டுகளுக்குப்பின் நடந்து வருகின்றன. அது இன்னும் முடியாத நிலையில், கோவிலின் வங்கி இருப்பு மற்றும் சொத்து விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி கோவிலின் பெயரில் 3 திட்டங்களின் கீழ் ரூ.1,811.10 கோடி நிலையான வைப்புத்தொகையாக வைக்கப்பட்டு உள்ளன. இதில் ரூ.1,311.10 கோடி பல்வேறு பொதுத்துறை வங்கிகளிலும், மீதமுள்ள ரூ.500 கோடி, ஒடிசா அரசால் வழங்கப்பட்டு கோவிலின் லாப நட்ட கணக்கில் வைக்கப்பட்டுள்ள மூலதன நிதியாகும் என்று நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர் இதைத்தவிர ரூ.100.70 கோடி சேமிப்பு, நடப்பு உள்ளிட்ட கணக்குகளில் பல்வேறு வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோவிலுக்கு சொந்தமாக 60,821 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 60,426 ஏக்கர் ஒடிசாவின் 24 மாவட்டங்களிலும், மீதமுள்ள 395 ஏக்கர் மேற்கு வங்காளம் உள்பட 6 மாநிலங்களிலும் உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/trending/puri-jagannath-temple-has-a-bank-balance-of-1912-crore



