மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் பகுதியை சேர்ந்த ரோஹித் தன்கர்(17) என்ற வாலிபர் 11வது வகுப்பு படித்து வந்தார். ரோஹித் ரக்ஷாபந்தன் அன்று தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது சகோதரி அவருக்கு ராக்கி கயிறு கட்டினார். அதன் பிறகு தனது தந்தையின் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய ரோஹித் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மொபைல் போன் மற்றும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான ரோஹித் அதில் அதிக அளவு பணத்தை இழந்தார். இதையடுத்து வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது. தற்கொலைக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அக்கா, அப்பா மற்றும் அம்மாவை தனியாக விட்டுவிடாதே, நான் செல்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். தற்கொலை தடுப்பு மையம் ஆன்லைன் கேமிங்கில் பணத்தை இழந்துவிட்டதாக ரோஹித் தனது நண்பருக்கு ஒரு வீடியோ அனுப்பி இருந்ததும் தெரிய வந்தது. சோசியல் மீடியா பதிவு மற்றும் நண்பருக்கு அனுப்பப்பட்ட வீடியோவை பார்த்து அவர்கள் ரோஹித் வீட்டிற்கு ஓடி வந்தனர். ஆனால் ரோஹித் அதற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தார். பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் அதற்குள் இறந்திருந்தார். ரோஹித் இறப்பதற்கு முன்பு உணர்ச்சிப்பூர்வமாக மற்றொரு பதிவையும் வெளியிட்டு இருந்தார். அதில், "அடுத்த முறை வரும்போது எல்லோருக்கும் பிடித்தவனாக மாறுவேன். மீதி இருக்கும் கறைகளை துடைப்பேன். கண்கள் ஈரமாகாது, யாருடைய இதயத்திலிருந்தும் எதையும் பறிக்க மாட்டேன்." என்று குறிப்பிட்டு இருந்தார். ரோஹித் மறைவு அவரது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/dont-leave-mom-and-dad-aloneplea-to-sister-youth-who-lost-money-in-online-game-commits-suicide



