புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவை திரிணாமுல் காங்கிரஸ் துணைத்தலைவர் சகாரிகா கோஸ், மாநிலங்களவை செயலாளரிடம் ஒரு நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளார். அதில், இன்று (திங்கட்கிழமை) மாநிலங்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய அத்துமீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்ப தாவது:- “அமைதியாக போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. இருப்பினும், அமைதியாக போராடிய மாணவர்கள், உயிருக்கு அச்சுறுத்தலான ஆயுதங்களால் குறிவைக்கப்பட்டது கவலை அளிக்கிறது. 'பெல்லட்' குண்டு' பயன்படுத்தப்பட்டதால் சில மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஒரு மாணவரின் கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது. 'பெல்லட்' குண்டு பயன்படுத்த யார் அதிகாரம் அளித்தது?” இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/pellet-gun-attack-on-students-trinamool-congress-urges-for-a-discussion-in-the-rajya-sabha-today




