சென்னை, கோவை மாணவர் கொலை தொடர்பான சிறப்பு கவன தீர்மானத்தின்போது எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; ”கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். 20 பேர் சேர்ந்து ஒரு மாணவரை அடித்துக் கொன்றுள்ளனர். அமுதன் கொலை கோஷ்டி மோதல் அல்ல. போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 30 பேர் கும்பலால் மாணவர் தனுஷ் அடித்து கொலை. காஞ்சிபுரத்தில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை. போதை கும்பலை தட்டிக் கேட்டதால் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கோவை மாணவன் அமுதன் கொலையை தனிப்பட்ட சம்பவமாகவோ, கோஷ்டி பூசலாகவோ கடந்து போய்விட முடியாது. அரசின் அலட்சியத்தால், காவல்துறையின் பொறுப்பற்ற போக்கு தான் கொலைக்கு காரணம் என்பது தான் குற்றச்சாட்டு. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/numerous-murders-in-tamil-nadu-over-the-past-week-udhayanidhi-speaks-in-the-assembly




