மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் அம்பானி வணிக வளாகத்தில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி நடக்கும் முன்பாக நிகழ்ச்சி நடக்க வேண்டிய இடத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 3 துப்பாக்கியுடன் மூவர் நடமாடுவதாகத் தெரிய வந்தது. அவர்கள் மூவரும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் என்று கூறி அடையாள அட்டையைக் காண்பித்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் நுழைந்தனர். ஆனால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து இரண்டு பேரைப் பிடித்தனர். ஒருவர் அங்கிருந்து எப்படியே நழுவிவிட்டார். இரண்டு பேரில் ஒருவரிடம் பிரதமர் அலுவலக அதிகாரி எனக்கூறி அடையாள அட்டை இருந்தது. அவருக்குப் பாதுகாப்பாக வந்தவரிடம் துப்பாக்கி இருந்தது. அந்தத் துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருந்தது. அவர்கள் தாங்கள் பிரதமர் அலுவலகத்தோடு தொடர்புடையவர்கள் என்று இருவரும் தெரிவித்தனர். பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறிக்கொண்டவர் பெயர் ரோஹன் பாரிக் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் அவரிடம் இருந்த அடையாள அட்டை போலியானது எனக் கண்டுபிடித்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட ரோஹன் பாரிக்கின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில், பிரதமரின் அலுவலக அடையாள அட்டை உண்மையானது என்றும், பிரதமரின் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவரால் ரகசிய ஆராய்ச்சிப் பணிக்காக விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த அதிகாரியின் அடையாளத்தை இப்போதைய நிலையில் வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார். வாசனை திரவியம் வாங்க சென்றார்களா அதோடு பாரிக்கின் வழக்கறிஞர்களான ஆனந்தினி பெர்னாண்டஸ் மற்றும் நமிதா மனேஷிண்டே ஆகியோர் நீதிமன்றத்தில் வாதிடுகையில், தங்கள் கட்சிக்காரர் வாசனைத் திரவியம் ஒன்றை வாங்குவதற்காகவே தனிப்பட்ட முறையில் அந்த வணிக வளாகத்திற்குச் சென்றிருந்ததாகவும், பிரதமரின் வருகைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினர். ஆனால், பிரதமரின் அலுவலக அடையாள அட்டை போலியானது என்று வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் கிராந்தி கும்பார், அந்த அட்டை எவ்வாறு பெறப்பட்டது மற்றும் அதற்கான நோக்கம் என்ன என்பதை அறிய கைது செய்யப்பட்ட நபரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்று கூறி, பாரிக்கின் கோரிக்கையை எதிர்த்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் வரும் 11ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது. அவருடன் வந்த மற்ற இருவர் பெயர் குந்தே மற்றும் பாகுல் எனத் தெரிய வந்தது. மேற்கொண்டு போலீஸார் நடத்திய விசாரணையில், பாரிக்கின் தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளராக ஓராண்டுக்கும் மேலாகப் பணியாற்றி வருவதாகவும், அதற்காக மாதம் 1.2 லட்சம் ரூபாய் ஊதியம் பெற்று வருவதாகவும் குந்தே கூறியுள்ளார். ```திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" - என்ன சொல்கிறார் பிரதமர் மோடி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/trending/man-arrested-with-a-gun-at-the-venue-of-the-prime-ministers-event




