கம்பம், கேரளம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை இடுக்கி மாவட்டம் வழியாக செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. போக்குவரத்து நெரிசல் இதையடுத்து நேற்று காலை தமிழக-கேரளம் எல்லையான கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் கம்பம் புற வழிச்சாலை பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் கம்பம் வடக்கு போலீசார், கம்பம்மெட்டு போலீசாருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர். மற்ற வாகனங்கள் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு வாகன போக்குவரத்து சீரானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-turn-back-vehicles-heading-to-sabarimala-on-the-kambammedu-mountain-road




