இன்று (செப்டம்பர் 28) முதல் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வங்கிப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தனர். ஆனால், இப்போது இந்த வேலைநிறுத்தம் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. முதலில் எதற்காக இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது? > வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே வேலைநாள்கள் இருக்க வேண்டும். அனைத்துச் சனிக்கிழமைகளும் விடுமுறைத் தினமாக அறிவிக்கப்பட வேண்டும். > ஒவ்வொருவரின் செயல்திறனுக்கேற்ப அரசாங்கம் தரும் ஊக்கத்தொகைத் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். காரணம், நிலை IV மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள அதிகாரிகள், தங்களது தனிப்பட்ட பணிச் செயல்திறனின் அடிப்படையில் 365 நாள்கள் வரையிலான அடிப்படைச் சம்பளத்திற்கு இணையான ஊக்கத்தொகையைப் இப்போது பெற முடிகிறது. வங்கி"நவம்பருக்கு பின் ஈரான் மீது கடும் தாக்குதல்" - 'மீண்டும்' அந்தர்பல்டி அடிக்கும் ட்ரம்ப்! ஆனால், பிற பணியாளர்கள் மற்றும் நிலை III வரையிலான அதிகாரிகள் அதிகபட்சமாக 15 நாள்களுக்கான அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி (Dearness Allowance) மட்டுமே பெற முடிகிறது. இப்படி நியாயமற்றதாக ஊக்கத்தொகைத் திட்டம் இருக்கக்கூடாது. பேச்சுவார்த்தை மூலம் இந்த ஊக்கத்தொகைக்கான தீர்வை முடிவு செய்ய வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளை முன்னெடுத்தே மூன்று நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது ஏன் வேலைநிறுத்தம் தள்ளிப்போடப்பட்டுள்ளது? வேலைநிறுத்தத்தைத் தள்ளிப் போடுவதற்கான அறிக்கையை வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி (UFBU) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. நேற்று இந்திய வங்கிகளின் சங்கம் (IBA) மற்றும் UFBU கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. அதில். > சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்த விவகாரத்தை ஆராய IBA மற்றும் UFBU பிரதிநிதிகளைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்படும். வங்கிRTI-ல் சட்டம் - ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பு - திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு! இந்தக் குழு சாத்தியமான அனைத்து மாற்று வழிகளையும் ஆராய்ந்து, அனைத்துத் தரப்பினருடன் கலந்துரையாடி, குறிப்பாக வாடிக்கையாளர்கள் உள்பட அனைவருக்கும் ஏற்ற தீர்வை வகுக்கும். > நிலை IV மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தைப் பொறுத்தவரை, தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இத்திட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை அரசுக்குப் பரிந்துரைக்க IBA உடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம். > 8.3.2024 அன்று நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட பிற சிக்கல்களுக்கு விரைவான தீர்வு காண்பதற்காகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து UFBU வேலைநிறுத்தத்தை தள்ளிப் போட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/personal-finance/banking/bank-unions-deferred-3-day-strike-after-talks-with-iba




