கிருஷ்ணகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில், கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சி.சுரேஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் நானும் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டோம். முக்கிய உறுதிமொழிகள் போராட்டத்தின் விளைவாக மாவட்ட ஆட்சியர் வழங்கிய முக்கிய உறுதிமொழிகள்: சுங்கச்சாவடி மாற்றம்: கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சின்னார் பகுதிக்கு மாற்றப்படும். கட்டணமில்லாப் பயணம்: அதுவரை (செப்டம்பர் வரை) கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்களின் வாகனங்கள் சுங்கக் கட்டணமின்றி அனுமதிக்கப்படும். காத்திருப்புத் தவிர்ப்பு: சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும் வாகனங்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்படும். விதிமுறை ஆய்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 கி.மீ இடைவெளிக்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-party-members-stage-a-sit-in-protest-demanding-the-removal-of-the-krishnagiri-toll-booth




