தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் சோதனைச் சாவடி பகுதியில் வந்த காரில் 600 கிலோ புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் வாகன சோதனை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இளையரசனேந்தல் சோதனைச்சாவடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கே சந்தேகப்படும்படி வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 600 கிலோ புகையிலை பொருட்கள், பணம், கார் பறிமுதல்; 2 பேர் கைது இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வானமாமலை வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோத விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த தூத்துக்குடி, எப்போதும்வென்றான் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் வேல்முருகன் (வயது 49) மற்றும் சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் மகன் ரமேஷ்(47) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ புகையிலைப் பொருட்கள், ரூ.7½ லட்சம் பணம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்யதார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/600-kg-of-tobacco-products-money-car-seized-in-kovilpatti-2-arrested




