சென்னை, முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவர் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். பனையூரில் நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- திமுகவுக்கு பாடம் எடுத்துள்ளார் முதல்-அமைச்சர் விஜய். தவெக ஆட்சி அமைத்த கடந்த 80 நாட்களில் திமுகவின் ஒரே கொள்கையே தவெக ஆட்சியை எப்படி கவிழ்ப்பது என்பதுதான். தவெக எம்எல்ஏக்களிடம் ரூ.50 கோடி, ரூ.100 கோடி தருவதாக செந்தில் பாலாஜி தரப்பு விலை பேசியது. எதிர்காலமே இல்லாத திமுக எங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலை பேச முயற்சித்து மாட்டிக் கொண்டது. கொளத்தூர் மக்கள் தன்னை ஏன் தூக்கி எறிந்தார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. கொளத்தூர் சென்ற முதல் அமைச்சர் விஜய்யால் அன்று சேப்பாக்கம் செல்ல முடியாமல் போனது. அதனால் சேப்பாக்கம் மிஸ் ஆகி விட்டது. மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து இனி ஒருவர் முதல்-அமைச்சர் ஆக முடியாது. திமுகவின் சாம்ராஜ்யம் முடிந்து விட்டது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு 6 மாதம் எடுத்துக் கொள்ளும். சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் பேசத் தொடங்கி பார்ட்டி பண்ட் என்று கூறியவுடன் திமுகவினர் ஓடிவிட்டனர். சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தார். திமுகவினர் அம்பலப்பட்டு விட்டனர். ஆட்சியில் இருந்த திமுக 2028 வரை பொதுப்பணித்துறையில் டெண்டர் போட்டுள்ளனர். வாய்ப்புகள் இல்லாதபோது இருப்பது நேர்மை அல்ல. வாய்ப்புகள் இருக்கும்போதும் தவெகவினர் நேர்மையாக உள்ளனர். இன்று கூட ரூ.10 ஆயிரம் கோடி கலெக்சன் செய்ய முடியும்; ஆனால் அதை நாங்கள் செய்ய மாட்டோம். பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதை வழக்கமாக வைத்திருந்தவர் கருணாநிதி. பெண்களை சக மனுஷியாக உதயநிதி நினைக்க வேண்டும். பெண்களை சம மனுஷியாக பார்க்கும் சிந்தனை உதயநிதிக்கு இல்லை. தான் பேசியது தவறு என்று தற்போது வரை உதயநிதி உணரவில்லை. ஆட்சியில் இருந்தபோது துணை முதல்-அமைச்சர் என உதயநிதிக்கு பட்டாபிஷேகம், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் என பட்டாபிஷேகம். முன்னாள் முதல்-அமைச்சரின் பேரன், மகன் என்ற திமிர் உதயநிதியிடம் உள்ளது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் திமிர் தான் தற்போது திமுகவை எதிர்க்கட்சியாக மாற்றியுள்ளது. ஒரு முறை கூட மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சர் விஜய் ஒருமையில் பேசியதில்லை. அங்கிள் என கூறியதற்கு கூட வருந்தினார். ஒரு இடத்திலாவது ஒரு பெண்ணை முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்து பேசியிருக்கிறாரா? தவெகவுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது பெண்கள் தான். விஜய் ஆட்சியில் பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவர். ஜோசப் விஜய் முதல்-அமைச்சராக இருக்கும் இந்த ஆட்சியில் பெண்கள் குறித்து அவதுறாக பேசினால் சும்மா இருக்க முடியாது. கூட்டணி பலத்தால் தான் திமுகவுக்கு 57 தொகுதிகள் கிடைத்தது. கூட்டணி இல்லையென்றால் திமுகவால் 10 தொகுதிகளை கூட வெல்ல முடியாது. நாங்கள் ஏன் உதயநிதியை பழிவாங்க வேண்டும். விஜய்க்கு எதிரியாக இருக்க ஒரு தகுதி வேண்டும். சேப்பாக்கத்தில் உதயநிதி மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க மாட்டார். சேப்பாக்கம் தொகுதியில் சாமானிய பெண் ஒருவரை நிறுத்துவோம். உதயநிதியால் டெபாசிட் கூட வாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/critics-of-women-will-be-arrested-under-chief-minister-vijay-rule-aadav-arjuna




