சென்னை, டெல்லி சென்ற, தமிழக விவசாயிகளை நாக்பூரிலேயே தடுத்து நிறுத்தியது யார்? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- டெல்லி சென்ற, தமிழக விவசாயிகளை நாக்பூரிலேயே தடுத்து நிறுத்தியது யார்? தமிழக உரிமைகள் மீது தாக்குதல் நடந்தும், தமிழக அரசு அமைதியாக இருப்பது ஏன்? கோரிக்கை டெல்லியில் காவிரி உரிமை உள்ளிட்ட தமிழ்நாட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராடச் சென்ற தமிழக விவசாயிகளை, மராட்டிய மாநிலத்தின் நாக்பூரில் மராட்டிய காவல்துறையினர், ரெயிலிலிருந்து கட்டாயமாக இறக்கி, அவர்களை தமிழகத்திற்கு திருப்பி அனுப்பியிருப்பது மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்க, சனநாயக விரோத செயலாகும். தாக்குதல் இந்திய அரசியலமைப்பு, நாட்டின் எந்த மாநிலத்திற்கும் சென்று தங்களது கருத்துகளை அமைதியான முறையில் வெளிப்படுத்தும் உரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமையையே பறிக்கும் வகையில் தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது, விவசாயிகளின் உரிமைகள் மீது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் உரிமைகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகும். குற்றவாளிகள் அல்ல தமிழக விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல. தங்களது வாழ்வாதாரத்தையும், காவிரி உரிமையையும் காக்க சனநாயக வழியில் போராட சென்றவர்கள். அவர்களை வழிமறித்து சொந்த மாநிலத்திற்கே திருப்பி அனுப்பியிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கும், சனநாயக மாண்பிற்கும் எதிரான செயல். நடவடிக்கை இந்த விவகாரத்தை தமிழக அரசு சாதாரண நிகழ்வாக கருதி வேடிக்கை பார்க்கக்கூடாது. உடனடியாக மராட்டிய அரசிடம் கடும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும், மத்திய அரசின் கவனத்திற்கு இந்த அநீதியை கொண்டு சென்று, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் உரிமை தமிழக விவசாயிகளின் சனநாயக உரிமையை பறித்த மராட்டிய காவல்துறையின் நடவடிக்கையை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதிலும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதிலும் தமிழக அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/who-stopped-tamil-nadu-farmers-in-nagpur




