`மகாநதி' தொடரின் மூலம் தனக்கென ஓர் ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றவர் லட்சுமி பிரியா. ̀காவேரி' என்கிற இவர் கதாபாத்திரத்திற்கு அத்தனை வரவேற்பு கிடைத்தது. தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ̀பிக் பாஸ் தமிழ் சீசன் 10' நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகக் களம் இறங்கினார். லட்சுமி பிரியா பிக் பாஸ் வீட்டில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட போதிலும் அனைத்தையும் எதிர்கொண்டார். தனக்கு தவறு எனப்படும் இடங்களில் தனக்காகவும், பிறருக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார். இந்த பிக் பாஸ் சீசனில் முதன் முதலாக ̀லீடர்ஸ் எக்சிட் லிஸ்ட் (Leader's Exit List)' என்கிற கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த வாரம் வீட்டின் தலைவராக இருக்கும் நபர் அந்த வாரத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் அடிப்படையில் யார் குறைவாக விளையாடினார்களோ அவர்களை லீடர்ஸ் எக்சிட் லிஸ்டில் இடம் பெறச் செய்வார். இதன் அடிப்படையில் வீட்டிலுள்ள மற்ற ஹவுஸ்மெட்ஸ் அவர்களில் யார் வெளியேற வேண்டும் எனத் தனித்தனியாக வாக்களிப்பார்கள். அதன் மூலம் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவார். கடந்த வாரம் ஓர் ஓட்டில் ஜாவீத் வெளியேறினார். இந்த வாரம் லட்சுமி பிரியா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ̀Un Fair Eviction' என அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் இது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி பிரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''சில விஷயங்கள் unfair-ஆ போச்சு. லீடர் எக்சிட் போர்டுல என்னை போட்டாங்க. ஒருவேளை அவங்க யாரையாச்சும் காப்பாத்த அப்படிப் பண்ணியிருக்கலாம். ஆனா, எனக்குத் தெரியும் நாங்க எங்க பெஸ்டைத்தான் கொடுத்தோம். பார்க்கிற உங்களுக்கும் தெரியும் யாருடைய பர்ஃபார்மன்ஸ் நல்லா இல்லைன்னு'' என்கிற கேப்ஷனுடன் ஸ்டோரி பகிரப்பட்டிருக்கிறது. அதில் அவருடைய ரசிகர்கள் பலரும், ''வீட்டிலிருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டிருக்கலாம். ஆனா, இது unfairனு எங்களுக்குத் தெரியும்'' எனத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இன்றைக்கு அவர் வீட்டிலிருந்து வெளியேறும் ப்ரொமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 10: மிருகத்தனத்தை வெளிப்படுத்தியது யார்? மணிவண்ணன் எலிமினேஷன் - இது சரியா பாஸ்? | 2nd Week முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/television/biggboss-tamil-10-famous-contestant-lakshmi-priya-was-evicted




