இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: ஜூலை 7-ந் தேதி (செவ்வாய்) * சுவாமிமலை முரு கப்பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம். * மேல்நோக்கு நாள். 8-ந் தேதி (புதன்) * திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால்அபிஷேகம். * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு. * சமநோக்கு நாள். 9-ந் தேதி (வியாழன்) * திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம். * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. * திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. * சமநோக்கு நாள். 10-ந் தேதி (வெள்ளி) * சர்வ ஏகாதசி. * கார்த்திகை விரதம். * வேலூர் ரத்தினகிரியில் பாலமுருகன் தங்க ரத உற்சவம். * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி. * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு. * கீழ்நோக்கு நாள். 11-ந் தேதி (சனி) * திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம். * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. * திருப்பதி திருவேங்கடமுடையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மேல்நோக்கு நாள். 12-ந் தேதி (ஞாயிறு) * முகூர்த்த நாள். * பிரதோஷம். * திருநெல்வேலி காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி. * சமநோக்கு நாள். 13-ந் தேதி (திங்கள்) * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம். * திருப்பெரும்புதூர் மணவாள மாமுனிகள், திருப்பதி ஏழுமலையான் உடையவருடன் புறப்பாடு. * மேல்நோக்கு நாள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/aanmigam-this-weeks-special-events-7th-july-2026-to-13th-july-2026




