அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. 24 பேர் பலி இந்நிலையில், நைஜீரியாவின் பிளேட்டா மாகாணத்தில் மன்கு நகர் அருகே பின்பர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் நேற்று புகுந்த ஆயுதக்குழுவினர் அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். மேலும், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவில் மத ரீதியிலான மோதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, நிலம், கால்நடைகளை மேய்ப்பது தொடர்பாக கிறிஸ்தவ, இஸ்லாமிய மத்தினர் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தற்போது நடந்த தாக்குதல் சம்பவம் கிறிஸ்தவ மதத்தினர் வசித்து வரும் கிராமத்தில் நடந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/nigeria-armed-group-attacks-village-24-killed




