உடன்குடி, கொட்டங்காடு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். உடன்குடி அருகே கொட்டங்காட்டில் பிரசித்தி பெற்ற தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு கொடி பட்டம் வீதி உலாவைத் தொடர்ந்து காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், அம்மன் சப்பர பவனி, பிரகார பவனி, ஊஞ்சல் சேவை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அக்டோபர் 2ம் தேதி காலை 7 மணி, மதியம் 2 மணி, இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும், மதியம் 12 மணி, இரவு 10 மணிக்கு வில்லிசை நடைபெற உள்ளது. இரவு 1 மணிக்கு வாணவேடிக்கையுடன் தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன், பவளமுத்து விநாயகர் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி அக்டோபர் 3ம் தேதி முழுவதும் தெரு பவனி வருதல் நடக்கிறது. அக்டோபர் 4ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சப்பரம் கோயிலை வந்தடைகிறது. தொடர்ந்து காலை 4.30 மணிக்கு கொடி இறங்குதல், மதியம் 11 மணிக்கு உணவு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு அக்டோபர் 3ம் தேதி வரை தினசரி காலை, மதியம், இரவு அன்னதானம் நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/udankudi-kottangadu-bhadrakali-amman-temple-festival-begins




