சென்னை, நாடு முழுவதும் கிருஷ்ண ஜெய்ந்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- கிருஷ்ண ஜெயந்தி திருநாள் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை கிருஷ்ண ஜெயந்தி நாளாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசம் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் மனம் தளராமல், தர்மத்தின் பாதையில் உறுதியுடன் பயணிக்க வேண்டும் என்பதோடு, அன்பு, பொறுமை, தன்னம்பிக்கை மற்றும் சமநிலை ஆகிய பண்புகளுடன் வாழ்ந்தால் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்ற பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். வாழ்வின் உயர்ந்த நெறி “தர்மத்தை நிலைநாட்டி, தீமையை அகற்றி, நன்மையைப் போற்றுவதே வாழ்வின் உயர்ந்த நெறி” என்ற பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் போதனையைப் பின்பற்றி, அவர் அவதரித்த இந்நாளில், அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திடட்டும் எனக் கூறி, மீண்டும் ஒருமுறை எனது கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanti-greetings-from-ttv-dhinakaran




