சென்னை, ஏழை மாணவிகளுக்கு படிக்க நிதி உதவி செய்து 15-க்கும் மேற்பட்ட சிறுமிகள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதற்காக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணியை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், ‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் யாரும் தப்ப கூடாது என சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி, அதன் முன்னேற்றம் குறித்த தகவல்களை அவ்வப்போது தனக்குத் தெரிவிக்கவும் காவல்துறைக்கு முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக திமுக ஆட்சியில் இருந்த காவல் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர். வழக்கின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என விளக்கம் கேட்டு இந்த வழக்கை கையாண்ட காவல் ஆய்வாளர் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க திமுக ஆட்சியில் எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு கைமாறியது என போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார்களை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில் பணப்பரிமாற்றங்களை விசாரிக்க சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் புதிய குழுவை அமைத்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். தற்போது வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/gem-veeramani-sexual-assault-case-summons-for-high-ranking-police-officials-who-served-during-the-dmk-regime




