புதுடெல்லி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 11-ந்தேதியில் இருந்து நவராத்திரி பண்டிகை ஆரம்பமாக உள்ளது. பண்டிகை காலம் நெருங்கும் வேலையில், சர்க்கரை விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் 'ஆன்லைன்' செயலிகளில் சர்க்கரை வாங்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாடிக்கையாளர், ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக இரண்டு கிலோ சர்க்கரை மட்டுமே வாங்க முடியும். ஆன்லைன் விற்பனைக்கு மட்டுமின்றி, நேரடி சில்லரை விற்பனையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டி மார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய சில்லரை விற்பனை நிறுவனங்களில், ஒரு வாடிக்கையாளர் 2 முதல் 3 கிலோ சர்க்கரை மட்டுமே வாங்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வினியோகத்தை அதிகரிக்கவும், பதுக்கலைத் தடுக்கவும், 10 லட்சம் டன் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை சுங்க வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றை இறக்குமதி செய்த காலத்தில் இருந்து இரண்டு மாதத்திற்குள் சுத்திகரித்து விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-prices-limits-set-on-sugar-purchases-via-online-apps




