ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள குன்ட்லூரில் வசித்து வந்த ஒரு தம்பதியினர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் பாப்பாயி பேட்டை கிராமத்தை சேர்ந்த தம்பதியர் ரவிக்குமார் - சிரிஷ். இவர்கள் ஐதராபாத் ஹையத்நகர் அருகில் உள்ள குன்ட்லூரில் வசித்து வந்தனர். தம்பதி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை இவர்கள் 2 பேரும் மல்காஜ்கிரி மாவட்டம் கட்கேசர் ரெயில் நிலைய பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். அவர்கள் அங்கு திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் விசாரணை இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பதியர் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/couple-commits-suicide-by-jumping-in-front-of-train-police-investigating




