புதுடெல்லி நாட்டின் வளர்ச்சியின் பலன் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் பேசும்போது, இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். விடுதலைக்காக லட்சக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இன்று நாம் 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். வந்தே மாதரம் பாடல் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடுகிறோம். செங்கோட்டையில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடப்படுகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார். வந்தே மாதரம் பாடல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அனைவரின் மனதிலும் மூவர்ணம் நிறைந்திருக்கிறது என்றார். தொடர்ந்து அவர் பேசும்போது, அரிய வகை தனிமங்கள் துறையில் தற்சார்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வோக்கல் பார் லோக்கல் (Vocal for Local) மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். செமிகண்டக்டரின் தேவை அனைத்து துறைகளிலும் முக்கியமாக உள்ளது. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. புதிய அணு உலைகள் 5 புதிய அணு உலைகளை அமைக்கவும், 2047-ல் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆழ்கடலில் இருக்கக் கூடிய எரிசக்தி வளங்களை ஆய்வு செய்து வருகிறோம். எரிசக்தி பாதுகாப்பு இன்று அவசியம். ஏ.ஐ., தரவு சேகரிப்பு மையம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாற்று எரிசக்திக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம். சோலார் மின் உற்பத்தி சிலர், தற்சார்பு பற்றி பேசும்போது கேலி பேசினர். ஆனால், கச்சா எண்ணெய்யிலும் இந்தியா தற்சார்பு நிலையை அடைந்து வருகிறது. நாட்டில் 12 ஆண்டுகளாக சோலார் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிரதமரின் சூரிய கர் திட்டம் மூலம் சூரிய ஒளியை பயன்படுத்தி இல்லங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சோலார் மூலம் சாதாரண குடும்பங்கள் கூட வருவாயை ஈட்டுகின்றன. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். 800-க்கும் மேற்பட்ட நகரங்களில் குழாய் வழியாக எரிசக்தி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. ஆழ்கடலில் இருக்கக்கூடிய எரிசக்தி வளங்களை ஆய்வு செய்து வருகிறோம். ஏழை, நடுத்தர மக்களையும் இணைத்தே நாட்டின் வளர்ச்சி அமைகிறது. சுயசார்பு இந்தியா ரெயில் தடங்கள் விரைந்து மின்மயமாக்கப்படும். இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் வெற்றி பெற்றுள்ளது. சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும். கடல் பரப்பில் எரிசக்தி உற்பத்தி செய்வதை நம் அரசு அனுமதித்துள்ளது. யூரியா குறைவான விலைக்கு வழங்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியின் பலன் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவில் இருந்து மீள்வதற்குள் பல நாடுகளில் போர்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற சவால்களில் இருந்து மீண்டு நாட்டை பாதுகாத்துளோம் என்று பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/government-action-to-ensure-development-benefits-poor-simple-and-middle-class-people-pm-modi-speech




