வாஷிங்டன், தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். பிரக்ஞானந்தா அமெரிக்காவில் 5 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தத் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அதேபோல, உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோவும், பிரக்ஞானந்தாவுக்கு கடும் சவால் கொடுத்து வந்தார். ஆட்டம் டிரா பிரக்ஞானந்தா 23 புள்ளிகளுடனும், ஜவோகிர் 21.5 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களில் பிடித்த நிலையில், இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் இருவரும் மோதிக் கொண்டனர். இருவரும் சமபலத்துடன் மோதியதால் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. சின்க்பீல்ட் கோப்பை இதன்மூலம், ஒரு சுற்று எஞ்சியிருந்த போதே, மொத்தம் 35 புள்ளிகளில் 23.5 புள்ளிகளை பெற்ற பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். ஜவோகிர் சிண்டாரோவ் 2ம் இடத்தைப் பிடித்தார். சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் பிரக்ஞானந்தா சுமார் ரூ.47 லட்சம் பரிசுத் தொகையையும், 13 ஜிசிடி புள்ளிகளையும் வென்றுள்ளார். இதன் மூலம் 2026ம் ஆண்டிற்கான ஜிசிடி சீசன் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். வரும் 10ம் தேதி துவங்கும் ஜிசிடி சீசனின் இறுதித் தொடரான 'சின்க்பீல்ட் கோப்பை’ தொடரில் பிரக்ஞானந்தா பங்கேற்க உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/chess-praggnanandhaa-clinches-stlouis-rapid-and-blitz-title




