திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கீழ்பாதிரி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மனைவி மங்கலட்சுமி (78 வயது). இவர்களின் மகன் ஏழுமலை (47 வயது), கூலித்தொழிலாளி. மங்கலட்சுமி தனது மகன் ஏழுமலையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி ஏழுமலை, மங்கலட்சுமியிடம் வந்து மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை தனது தாயை அடித்துவிட்டு அவரது காதில் இருந்த தங்க கம்மலை பறித்துக்கொண்டு சென்றார். இதில் படுகாயமடைந்த மங்கலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மங்கலட்சுமி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மங்கலட்சுமியின் மகள் பழைய பந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இருசம்மாள் வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும் நேற்று காலை ஏழுமலையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/laborer-arrested-for-killing-mother-over-liquor-money




