சென்னை, இணையத்தில் 'லீக்' ஆனாலும் 'பீக்' குறையாத வகையில் 'ஜனநாயகன்' திரைப்படம் வசூலில் வாரி குவித்து வருகிறது. முதல் நாள் வசூல் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. தடைகளை உடைத்த 'ஜனநாயகன்' தமிழக திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த விஜய், அரசியலில் காலடி எடுத்து வைத்ததால், சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். அவருடைய 69-வது மற்றும் கடைசிப்படமான 'ஜனநாயகன்', மிகுந்த எதிர்பார்ப்புக்கும், கடும் போராட்டத்திற்கு மத்தியில் உலகம் முழுவதும் நேற்று (ஜூலை 23) வெளியானது. ஏற்கனவே, 'ஜனநாயகன்' இணையத்தில் எச்.டி. தரத்தில் வெளியானதால், தியேட்டர்களில் ஆர்ப்பரிப்பு இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால், ரசிகர்கள் படை பலத்தால், ஆட்டம். பாட்டம். கொண்டாட்டம். என தியேட்டர்கள் களைகட்டின. முதல் நாள் வசூல் எவ்வளவு? உலகம் முழுவதும் 'ஜனநாயகன்' திரைப்படம் 7,400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் மட்டும் 5,300 தியேட்டர்களில் வெளிவந்தது. குறிப்பாக, தமிழகத்தில் 1,250 தியேட்டர்களில், 2,700 திரைகளில் வெளியிடப்பட்டது. ஆக்சன் அதிரடியில் ரசிகர்களை திருப்திபடுத்திய 'ஜனநாயகன்' திரைப்படம், முதல் நாளில் உலக அளவில் ரூ.78 கோடி முதல் ரூ.80 கோடி வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் ரூ.41 கோடியை வாரி குவித்துள்ளது. தமிழ்நாட்டில், ரூ.36.50 கோடி வசூலித்துள்ள இப்படம், தெலுங்கில் ரூ.2.75 கோடியும், இந்தியில் ரூ.1.75 கோடியும் ஈட்டியுள்ளது. ரூ.1,000 கோடியை தொடுமா? இன்னும் தொடரும் நாட்களில் வார விடுமுறை வேறு வருவதால், ஜனநாயகனின் வசூல் வேட்டை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.100 கோடி கிளப்பில் இன்றே இணைந்துவிடும் 'ஜனநாயகன்', ரூ.1,000 கோடி வசூலை வாரி குவித்து சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்', நிறைவான வசூலை வாரி வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஜனநாயகன் எச். வினோத் இயக்கிய இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்தனர். அனிருத் இசையமைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jananayagan-rocks-the-box-office-do-you-know-the-first-day-collection




