தர்மபுரி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியில் இருந்து, இன்று 6,000 கன அடியாக சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீடித்த வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்த நிலையில், நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று வார விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்கு சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்து கொண்டும், குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டும், நீர்வீழ்ச்சிகளில் குளித்தும் ஆனந்தமாக விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-hogenakkal-for-the-weekend-holiday




