நீட், க்யூட் வினாத்தாள் கசிவு, இந்தக் கசிவுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார். தொடர் உண்ணாவிரதத்தால் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி, உண்ணாவிரதப் போராட்டத்தின் 21-வது அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சோனம் வாங்சுக்"நான் முதலிலிருந்தே மாணவர்களுடன் தான் நிற்கிறேன்" - மம்தா பானர்ஜி விமர்சனங்கள். நேற்று முன்தினம் (ஜூலை 24), சோனம் வாங்சுக்கை மருத்துவமனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜித்தேந்திர சிங். இதையடுத்து 26-வது நாளில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் சோனம் வாங்சுக். ஆனால், இவர் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக தான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் என்கிற விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் சோனம் வாங்சுக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது. மத்திய அரசுடன் டீல்? "லடாக்கின் உறைபனியிலும், டெல்லியின் சுட்டெரிக்கும் வெயிலிலும் அமர்ந்து போராடிய பிறகு. என் உண்ணாவிரதம் எவ்வளவு தூய்மையானது என்பதற்கு நான் யாரிடமாவது சான்றிதழ் வாங்க வேண்டுமா என்ன? ஏன் அவர்களிடம் போய் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டீர்கள்? அவர்களுக்கு இடையே என்ன டீல் நடந்தது? என்ன பேரம் பேசப்பட்டது?' என்றெல்லாம் மக்கள் எனக்கு போன் செய்தும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் கேட்கிறார்கள். எனக்கு ஏதாவது டீல் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், நான் ஏன் 26 நாட்கள் பட்டினியாகக் கிடக்க வேண்டும்? ஒரு ஏசி அறையில் சொகுசாக உட்கார்ந்தே டீல் பேசியிருக்கலாமே; டெல்லி வீதியில் வந்து இந்த வெயிலில் காய வேண்டிய அவசியமே இல்லையே. சோனம் வாங்சுக்தேவையான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லை; வினாத்தாள் கசிவு விசாரிக்க விரைவு நீதிமன்றம்? - சிதம்பரம் வெட்கமாக இருக்கிறது இதுபோன்ற எண்ணங்கள் எழும் ஒரு நாட்டினை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. செவ்வாய் இரவு, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டாவும், ஜிதேந்திர சிங்கும் வந்தார்கள். உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்கள். ஆனால், நிபந்தனைகள் இன்றி முடிக்க முடியாது என்று நான் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். எனது கோரிக்கைகள்: > கல்வித்துறையில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் வேண்டும்; > கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்; > தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். > இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். > மாணவர் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையோ, FIR-ஓ பதிவு செய்யக் கூடாது. சில கோரிக்கைகளுக்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர், மற்றவற்றைச் பரிசீலிப்பதாகக் கூறினர். சோனம் வாங்சுக்"திரைப்படக் கலைஞர்கள் மக்களின் வலியைப் பேச உரிமை உண்டு; ஆனால், திசை திருப்பக் கூடாது" - சீனு ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர யோசிக்கிறோம் அமைச்சர்களின் கைகளால் உண்ணாவிரதத்தை முடிக்க எனக்கு விருப்பமில்லை. பல்வேறு கட்சி எம்.பி.க்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் லடாக் தலைவர்கள் முன்னிலையில்தான் முடிக்க விரும்பினேன். ஆனால் அடுத்த நாள், எம்.பி.க்களும் மாணவர் தலைவர்களும் கேட் அருகிலேயே பல மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். நான் சுதந்திரமான குடிமகன் என நீதிமன்றம் அறிவித்த பிறகும், மக்களை என்னைச் சந்திக்க விடாமல் தடுத்ததற்காக நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர யோசித்து வருகிறோம். மாணவர்கள் மீதான சட்ட நடவடிக்கையைத் திரும்பப் பெறும் நிபந்தனைக்கு அரசுத் தரப்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனக்கு வலிக்கிறது ஆனால், மாணவர்களைப் பல ஆண்டுகள் நீதிமன்ற அலைச்சல்கள், சிறை அல்லது NSA (தேசிய பாதுகாப்புச் சட்டம்) போன்ற கடுமையான சட்டங்களிலிருந்து பாதுகாப்பதற்கான எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் இல்லாமல் நான் உண்ணாவிரதத்தை முடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். இறுதியாக, 23-ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்கள். மக்கள் கொந்தளிப்பாலும் அரசின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தாலும் கல்வி அமைச்சரின் ராஜினாமா எப்படியும் நடக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே, அமைச்சரின் ராஜினாமாவை விட மாணவர்களின் பாதுகாப்பே எனக்கு முதன்மையானதாக இருந்தது. என்னால் இன்னும் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை, அதற்குள் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கேட்பது வலிக்கிறது". என்றிருக்கிறார். CJP Protest: `2 கோரிக்கைகள் ஏற்பு; நாளையும் தொடரும் பேச்சுவார்த்தை!' - ஜே.பி.நட்டா முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/sonam-wangchuk-denies-deal-claims-over-hunger-strike




