விருதுநகர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சவுந்தரராஜன். லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் அருப்புக்கோட்டை நகர் செயலாளர் கார்த்திகேயன் (30 வயது), அருப்புக்கோட்டை வடக்கு, மேற்கு இணை செயலாளர் சதீஷ்குமார் (28 வயது) ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். இவர்கள் விருதுநகர் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு லாரிகளில் மதுபானம் கொண்டு செல்லும் உரிமம் பெற்று தருவதாக சவுந்தரராஜனிடம் கூறியுள்ளனர். அதற்கு மதுவிலக்குத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி பணம் கேட்டுள்ளனர். அதன்பேரில் சவுந்தரராஜன், மேற்கண்ட 2 பேரிடம் ரூ.22 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. உரிமம் பெற்று தந்த பிறகு மேலும் பணம் தர வேண்டும் என்று இருவரும் கூறியுள்ளனர். இந்த நிலையில் லாரி உரிமையாளர் சவுந்தரராஜனுக்கு அந்த த.வெ.க. நிர்வாகிகள் மீது சந்தேகம் எழுந்தது. மதுவிலக்குத்துறை அமைச்சர் பெயரைக்கூறி பணம் வசூலித்து இருப்பதால், அதுபற்றி நேரடியாக அந்த துறை அமைச்சரான விக்னேஷிடம் அதுபற்றி கேட்டு, அந்த த.வெ.க. நிர்வாகிகள் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த பணம் வசூலிப்புக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறிய அமைச்சர், அதுபற்றி விசாரித்து உள்ளார். பணம் வசூலிப்பு நடந்ததை அறிந்த அவர், உடனடியாக தனது உதவியாளர் சுரேஷ் மூலம் விருதுநகர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மேற்கண்ட த.வெ.க. அருப்புக்கோட்டை நகர் செயலாளர் கார்த்திகேயன், வடக்கு, மேற்கு இணை செயலாளர் சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள கோவையை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவரையும் (42 வயது) போலீசார் தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/two-dmk-functionaries-arrested-for-collecting-rs-22-lakh-using-ministers-name




