சென்னை, 112 கல்லூரி முதல்வர்கள் நியமனம் என்பது தமிழக வரலாற்றில் முதல் முறை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறை இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளில், ஒரே நேரத்தில் 112 இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற ஒன்றை தமிழக அரசு செய்ததில்லை. 10 முதல் 25 கல்லூரி முதல்வர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள். 112 கல்லூரி முதல்வர்கள் நியமனம் என்பது தமிழக வரலாற்றில் முதல் முறை. அதுவும் ஒரு சல்லிக்காசு கூட வாங்காமல் வேலை வழங்கிய அரசு, விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு. துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது குறித்து தற்போது விரிவாக விவாதிக்க முடியாது. துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களில், கன்வீனர் கமிட்டி மூலம் 11 பல்கலைக்கழகங்களில் பொறுப்பு துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/an-unprecedented-achievement-in-60-years-appointment-of-112-government-college-principals-simultaneously-minister-viswanathan




