சென்னை, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தி.மு.க. முன்னாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை இது தொடர்பாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதன்படி இந்த வழக்கு கடலூர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் இந்த வழக்கில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும் அவாது குடும்பத்தினரும் விடுவிக்கப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை, கடலூர் ஐகோர்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. சென்னை ஐகோர்ட்டு இது தொடர்பான விசாரணையின் போது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை, ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் விடுவிக்க வேண்டும் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு இன்று (செவ்வாய் கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்து வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் விசாரணையை கடலூர் நீதிமன்றத்தில் இருந்து மாற்றக் கோரிய மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-refuses-to-discharge-mrk-panneerselvam-from-disproportionate-assets-case




