சென்னை, இது தன் அம்மாவின் கனவு என காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஷர்மிளா உருக்கமாக பேசியுள்ளார். இந்தியாவுக்கு தங்கம் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஷர்மிளா தன்கர் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 40 வயதான ஷர்மிளா தன்கர், 9.81 மீட்டர் தூரம் குண்டு எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கானா நாட்டைச் சேர்ந்த சினாபு இசா 8.65 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். வெற்றிக்குப் பிறகு உருக்கமான பேட்டி வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா தன்கர், தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "நாட்டிற்காக பதக்கம் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகுந்த பெருமையாக உணர்கிறேன். தொடர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்த்துக்கொண்டே இருப்பேன். இது என்னுடைய கனவு மட்டுமல்ல, என் தாயாரின் கனவும் கூட. இதைப் பார்த்து என் தாய் அளவற்ற மகிழ்ச்சி அடைவார். இந்ததங்கப் பதக்கத்தை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/cwg-2026-sharmila-dhankar-dedicates-historic-cwg-gold-to-mother-sets-sights-on-asian-games-and-paralympics




