சென்னை, தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:- புகழாரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருந்த சாதிய ஆதிக்கத்தையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து, சுயமரியாதை- பகுத்தறிவு- சமத்துவம்- சமூகநீதி எனும் நான்கு தூண்களின் மீது புதிய எழுச்சிமிகு சமூகத்தைக் கட்டமைக்கப் போராடியவர் தந்தைப் பெரியார் பிறந்தநாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன். அவரது போராட்டம் ஒரு தனிமனிதருக்கு எதிரானதல்ல; ஆதிக்கத்திற்கு எதிரானது. அவரது குரல் ஒரு காலத்திற்கானதல்ல; சமத்துவம் நிலைநாட்டப்படும் வரை தொடர வேண்டிய குரல். “பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை; மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும்” என்ற சமூகநீதிப் பாதையைத் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமாகப் பதித்த பெரியாரின் வழியில் என்றும் நடந்திட உறுதியேற்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/periyars-struggle-was-against-domination-edappadi-palaniswami




