4கே தரத்தில் மேம்படுத்தப்பட்ட மோகன்லாலின் ‘கிரீடம்’ திரைப்படம் நாளை ரீ-ரிலீஸாகிறது கடந்த 1989ல் சிபி மலயில் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ‘கிரீடம்’ படம் வெளியானது. மறைந்த இயக்குனர் லோகிததாஸ் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியிருந்தார். போலீஸ் வேலைக்கு முயற்சிக்கும் இளைஞன் ஒருவன், ரவுடியுடன் ஏற்படும் திடீர் மோதலால் கடைசி வரை ரவுடியாகவே சித்தரிக்கப்படுவதுதான் இப்படத்தின் கதை. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேலாக ஓடிய இந்த படத்தில் திலகன், பார்வதி, ஜெயராம், கொச்சின் ஹனீபா, மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில், நாயகனாக நடிகர் மோகன்லால் நடித்திருந்தார். காவல்துறை அதிகாரியாக ஆசைப்படும் சேது மாதவனுக்கு (மோகன்லால்) அவரது தந்தை (திலகன்) ஆதரவாக இருப்பார். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் சேது பெரிய ரௌடியைக் கொல்ல, அவரது வாழ்க்கை மாறுகிறது. இந்த நிலையில், 4கே தரத்தில் மேம்படுத்தப்பட்ட ‘கிரீடம்’ திரைப்படம் வருகிற ஜூலை 10 ஆம் தேதி ரீ-ரிலீஸாகிறது.37 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்படம் திரைக்கு வருவதால் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ‘கிரீடம்’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சியில் கலந்துகொண்ட மோகன்லால், நிகழ்வில் பேசுகையில், “இதுபோன்ற ஒரு படத்தை மீண்டும் உருவாக்க, அப்போது இணைந்து பணியாற்றிய பல அற்புதமான கலைஞர்கள் இன்று நம்மிடையே இல்லை” என்று உருக்கமாகப் பேசினார். அவர் குறிப்பிட்டது போல, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த திலகன், கொச்சின் ஹனீபா, முரளி, கவியூர் பொன்னம்மா, மாமுகோயா, ஒடுவில் உன்னிகிருஷ்ணன், வில்லனாக நடித்த மோகன்ராஜ் மற்றும் படத்தின் கதாசிரியரான லோகிததாஸ் உள்ளிட்ட பலர் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/mohanlals-kireedam-to-be-re-released-after-37-years




