நைரோபி, கென்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்நாடுகளில் ஐ.எஸ்., அல்கொய்தா, அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சிக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராணுவ வீரர்கள் 5 பேர் பலி இந்நிலையில், சோமாலியா எல்லையில் கென்யாவின் மண்டிரோ நகரில் வெண்டிடேம் என்ற எல்லையோர பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று முன் தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராணுவத்தினரின் வாகனத்தை குறிவைத்து அல் ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/kenya-terrorist-attack-five-soldiers-killed




