தேனி, கம்பம் பள்ளத்தாக்கு கடைமடைப் பகுதிகளான உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு விளையும் காய்கறிகள் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. ஆண்டு முழுவதும் சாகுபடி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதிகளாக விளங்கும் குச்சனூர், கூழையனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதிகளில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கத்தரிக்காய், பீட்ரூட், காலிபிளவர், தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இங்கு ஆண்டு முழுவதும் தடையின்றி காய்கறிகள் சாகுபடி செய்யப்படுவது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். பொதுமக்கள் வரவேற்பு முல்லைப்பெரியாறு பாசன நீரை பயன்படுத்தி இப்பகுதியில் விவசாயம் செய்யப்படுவதால், இங்கு விளையும் காய்கறிகள் தனித்துவமான சுவையுடனும், தரம் மிகுந்ததாகவும் காணப்படுகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களிடையேயும், வியாபாரிகளிடையேயும் கம்பம் பள்ளத்தாக்கு காய்கறிகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அறுவடை தீவிரம் இந்த நிலையில், தற்போது உப்புக்கோட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காய பயிர்கள் நன்கு விளைந்து, தற்போது அறுவடை செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயங்களை தரம் பிரித்து, மூட்டைகளில் அடைத்து விற்பனைக்காகப் பல்வேறு சந்தைகளுக்கு விவசாயிகள் அனுப்பி வைத்து வருகின்றனர். ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் செலவு இதுகுறித்து உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், "எங்கள் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு விதை, உரம், ஆட்கள் கூலி என சுமார் ரூ.45 ஆயிரம் வரை செலவாகிறது. சின்ன வெங்காயத்தை நடவு செய்த 70 முதல் 80 நாட்களில் அறுவடை செய்யத் தயாராகி விடுகிறது. தற்போது சந்தையில் சின்ன வெங்காயம் தட்டுப்பாடின்றி நல்ல தரத்துடன் விளைந்துள்ளது" என்றார். விவசாயிகள் மகிழ்ச்சி மேலும் அவர் கூறுகையில், "கடந்த சில வாரங்களாகவே சின்ன வெங்காயத்திற்குச் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது தரம் வாரியாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. போதிய பாசன வசதியுடன், விலையும் அதிகரித்துள்ளதால் நடப்பு பருவத்தில் நல்ல லாபம் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/kambam-valley-small-onion-harvest-boosts-farmers-income




