தமிழிக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை இன்று (ஜுலை.4) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், "கடந்த ஜூன் 21-ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுமிகளிடம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பி. விஸ்வநாதன் அவர்கள் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதனைக் குறித்து உடனடியாக முறையான விசாரணை நடத்த உத்தரவிடவும், மேலும் விசாரணை நிறைவடையும் வரை அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்து, தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார். அமைச்சர் விஸ்வநாதன் இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழ்நாடு அரசின் மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் உண்மைக்குப் புறம்பாகத் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆளுநர் அர்லேகரைச் சந்தித்தது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாளினை முன்னிட்டு திரு. பெ.விஸ்வநாதன் அவரது சொந்தத் தொகுதியில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும், குழந்தைகளுக்குான யோகா நிகழ்ச்சியையும், தன்னுடைய குழந்தைகளாகக் கருதி வாஞ்சையோடு விழா நடத்தியதைக் குறை கூறுவது, "காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்" என்கிற கதையாக இருக்கிறது. ஆளுநரை சந்தித்த நயினார் நாகேந்திரன் மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்கல்வி அமைச்சராக இருக்கக் கூடாது என்கிற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் போதகர் திரு கேசவநாயகம் எழுதிக் கொடுத்ததை எடுத்துக்கொண்டுபோய் ஆளுநரிடம் அளித்த குற்றச்சாட்டினால் உயர்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதிக்கமே மேலோங்க வேண்டும் என்கிற சித்தாந்தத்தையே இக்குற்றச்சாட்டு நிரூபிக்கிறது. திரு பெ. விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் அளிக்கப்பட்ட அறிக்கை ஆர்.எஸ்.எஸ்.ஸின் வெறுப்பரசியலையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்பதே உண்மையாகும்" என்று தெரிவித்திருக்கிறார். "மக்கள் பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்; தேவைப்பட்டால்." - ஆளுநர் அர்லேகர் பேச்சு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/manikam-tagore-condemns-nainar-nagendran-action-against-vishwanathan




