டொரோண்டோ, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 8 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். தனது பயணத்தின் முதற்கட்டமாக கனடா சென்றுள்ள நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் தலைநகர் டொராண்டோவில் நடைபெற்ற உயர்மட்ட வர்த்தக வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். டொராண்டோவில் உள்ள இந்திய துணை தூதரகம், கனடா-இந்தியா வர்த்தக மன்றம் மற்றும் சி.ஐ.ஐ. ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த வட்டமேசை மாநாட்டில், தூய்மையான தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், அரிய தாதுக்கள், ஆற்றல் சேமிப்பு, நிலையான உள்கட்டமைப்பு, விவசாயம், உணவு பதப்படுத்துதல், வாகனத் துறை, ஜவுளி, இணைய பாதுகாப்பு, உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, நிதி மேலாண்மை, உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளைச் சேர்ந்த வணிக தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது;- “இந்தியா, ஒரு முக்கிய வளர்ச்சி சந்தையாக மட்டுமல்லாமல், உலகளாவிய உற்பத்தி, புத்தாக்கம், சேவைகள் மற்றும் ஏற்றுமதிக்கான மையமாகவும் உருவாகி வருகிறது. இந்திய பொருளாதார சூழலில் நடைபெற்று வரும் சீர்திருத்தங்கள், டிஜிட்டல்மயமாக்கல், உள்கட்டமைப்பு முதலீடு மற்றும் இலக்கு சார்ந்த கொள்கை ஆதரவு ஆகியவை இந்தியாவை நீண்டகால முதலீட்டிற்கான மையமாக தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன. கனடாவின் வணிகங்களும், முதலீட்டாளர்களும் இந்தியாவை வெறும் முதலீட்டிற்கான இடமாக மட்டும் பார்க்காமல், உலகளாவிய வளர்ச்சிக்கான கூட்டாளியாக பார்க்க வேண்டும். நீண்டகால செயல்பாடுகளையும், கூட்டாண்மைகளையும் உருவாக்க வேண்டும். முதலீட்டை மையமாகக் கொண்ட இந்தியா-கனடா பொருளாதார கூட்டாண்மையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியா 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' என்ற இலக்கை நோக்கி முன்னேறும்போது, கனடாவின் மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை இந்தியாவின் திறமை மற்றும் தொழில்துறைத் திறன்களுடன் இணைத்து ஆழமான பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது அவசியமாகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/india-is-emerging-as-a-global-manufacturing-and-service-hub-nirmala-sitharaman



